ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடும் வரை காசாவிலிருந்து வெளியேற மாட்டோம்: நெதன்யாகு திட்டவட்டம்

Wait 5 sec.

கடந்த மாதம் டிரம்ப் அறிவித்த காசா தொடர்பான ஒப்பந்தத்தை நிராகரித்துள்ள இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, ஹமாஸ் ஆயுதங்களைக் கைவிடும் வரை காசாவிலிருந்து வெளியேற மாட்டோம் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் காசாவுக்கான அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்த 15 அம்சத் திட்டத்தை இஸ்ரேல் நிராகரிக்கிறது என்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் கூறிய நெதன்யாகு, முதலில் ஹமாஸ் அமைப்பு உண்மையாகவே தனது ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றும், அது ஏதோ ஒரு "போலி ஆயுதக் களைப்பாக" இருக்கக்கூடாது என்றும் அதுவரை இஸ்ரேலிய ராணுவம் எந்தவொரு வெளியேற்ற நடவடிக்கையையும் மேற்கொள்ளாது; அதேநேரத்தில் எங்கள் படைகள் மற்றும் மக்கள் மீதான அச்சுறுத்தல்களைத் தொடர்ந்து முறியடிக்கும்.மேலும், உண்மையில், ஆயுதங்களைக் கைவிடுதல் மற்றும் இஸ்ரேலியப் படைகளை விலக்கிக்கொள்ளுதல் ஆகிய நடவடிக்கைகள் ஒவ்வொரு கட்டமாகவே மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும்.அதே சமயம் காசாவுக்கான திட்டங்கள் குறித்து வாஷிங்டனுடன் தொடர்ந்து விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார்; கடந்த வாரமும் இதேபோன்ற கருத்துக்களை அவர் வெளியிட்டிருந்தார்.இஸ்ரேலின் இந்த நிராகரிப்பு, கடந்த ஆண்டு செப்டம்பரில் அறிவிக்கப்பட்ட டிரம்ப்பின் காசா அமைதித் திட்டத்திற்கு மற்றொரு பின்னடைவாகவே பார்க்கப்படுகிறது. நெதன்யாகுவின் அறிக்கை குறித்து வெள்ளை மாளிகையிலிருந்து உடனடியாக எந்தக் கருத்தும் வெளியாகவில்லை.கடந்த அக்டோபரில் காசா பகுதியில் ஆரம்பக்கட்ட போர்நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டதிலிருந்து, இஸ்ரேல் தொடர்ந்து அந்த பகுதியில் தாக்குதல்களை நடத்தி வருகிறது.சுமார் 20 லட்சம் மக்கள் வசிக்கும், பெருமளவில் சிதைந்துபோன பாலஸ்தீனியப் பகுதியின் பாதிக்கும் மேற்பட்ட பகுதியை இஸ்ரேலிய படைகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன.Netanyahu told a Cabinet meeting that "Israel rejects the 15-point document" but is still discussing plans for Gaza with Washingtonநேபாளத்தில் 8 கட்சிகள் சோ்ந்து புதிய கூட்டணி