இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் மகன் அமீன் சென்ற கார் சிறிய விபத்தில் சிக்கியது. பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானின் மகன் அமீன். இவர் இன்று அதிகாலை 3.30 மணியளவில் தனது விலை உயர்ந்த காரில் நண்பரோடு கிண்டி நோக்கி சென்றிருக்கிறார். அப்போது, ஒலிம்பியா டெக் பார்க் சிக்னல் அருகே ரேபிடோ வேகன்-ஆர் வாகனம் மீது அமீனின் கார் மோதியதாக தகவல் தெரிய வந்துள்ளது. இந்த சம்பவத்தில் அமீன், அவரது நண்பர் மற்றும் மற்றொரு வாகனத்தின் ஓட்டுநர் ஆகியோருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. விபத்து குறித்து அடையாறு போக்குவரத்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமானுக்கு கதீஜா, ரஹீமா என இரண்டு மகள்களும் ஏ.ஆர். அமீன் என்ற மகனும் உள்ளார்.Composer A.R. Rahman's son Ameen's car involved in a minor accident.தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முதலிடம்: இன்று பேரவையில் தீா்மானம்