சென்னையில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கவுன்சில், மாணவர்களுக்கு இலவச ஆன்லைன் படிப்புகளை அறிமுகம் செய்திருக்கிறது.இதன் சிறப்புகள் என்னவென்றால்சேர்க்கைக் கட்டணம் இல்லாத, முழுமையாக நிதியுதவி செய்யப்படும் இணையவழிப் படிப்புகள்.கல்வி, கற்பித்தல், தலைமைத்துவம் மற்றும் தொழில்முறை மேம்பாடு தொடர்பான திறன்களைக் கற்றுக்கொள்ளலாம்.எந்த நேரத்திலும் அணுகக்கூடிய விடியோக்கள் மற்றும் தங்களுக்கு ஏற்ற வேகத்தில் கற்றல் வாய்ப்பு.தேர்ந்தெடுக்கப்பட்ட படிப்புகளுக்கு இலவசச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.மாணவர்கள், கல்வியாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஏற்றது என்பன பட்டியலிடப்படுகின்றன.கடைசித் தேதி: குறிப்பிட்ட கடைசித் தேதி என்று எதுவும் இல்லை.மேலதிகத் தகவல்களை அறிந்து கொள்ள பிரிட்டிஷ் கவுன்சிலின் https://www.britishcouncil.in/english/schools/chennai என்ற இணையதளத்தை நாடலாம்.