டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிறைவு!

Wait 5 sec.

மும்பை: அரசியல் நிச்சயமற்ற சூழலில், சர்வதேச கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் உயர்வால், இன்றைய அந்நியச் செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.43 ஆக நிலைபெற்றது.இருப்பினும், சமீபத்திய அந்நிய மூலதனம் வரத்து உள்ளிட்டவையால், ரூபாயின் மதிப்பிற்கு ஓரளவுக்கு ஆதரவளித்ததாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்தனர்.வங்கிகளுக்கு இடையிலான அந்நிய செலாவணி சந்தையில், டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு ரூ. 95.38 ஆக தொடங்கி, வர்த்தகத்தின்போது இது ரூ. 95.37 முதல் ரூ. 95.45 என்ற வரம்பிற்குள் வர்த்தகமானது. இறுதியில், முந்தைய நாள் வர்த்தக முடிவை விட 13 காசுகள் சரிந்து ரூ. 95.30 லிருந்து ரூ. 95.43 ஆக நிலைபெற்றது.நேற்று (திங்கள்கிழமை) டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 13 காசுகள் சரிந்து ரூ. 95.30 ஆக நிலைபெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.The rupee declined 13 paise to settle at 95.43 against the US dollar on Tuesday.சென்செக்ஸ் 388 புள்ளிகளுடனும், நிஃப்டி 24,500-க்குக் கீழே சரிவு!!