ஆடி அமாவாசையை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு ஆக. 12ஆம் தேதி உள்ளூா் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியா் மு. பிரதாப் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஆடி அமாவாசையை முன்னிட்டு ஆக. 12ஆம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூா் விடுமுறை வழங்கப்படுகிறது.இதற்கு ஈடாக ஆக. 22ஆம் தேதி மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.மேலும், 12ஆம் தேதி மாவட்ட தலைமைக் கருவூலம், கிளைக் கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளைக் கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளா்களைக் கொண்டு இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.