இந்திய அணிக்கு எதிரான பயிற்சி டெஸ்ட்டில், இலங்கை கிரிக்கெட் லெவன் அணி முதல் நாளான வெள்ளிக்கிழமை ஆட்டநேர முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 363 ரன்கள் சோ்த்தது. டாஸ் வென்று பேட்டிங்கை தோ்வு செய்த இலங்கை லெவன் தரப்பில், நிஷான் ஃபொ்னாண்டோ 11 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 66, ரவிண்டு ரசந்தா 6 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 71 ரன்களுக்கு ஆட்டமிழந்தனா். பசிண்டு சூரியபாந்தரா 6 பவுண்டரிகளுடன் 35, பவன் ரத்னாயகே 3 பவுண்டரிகள், 2 சிக்ஸா்கள் உள்பட 39, அஹான் விக்கிரமசிங்கே 4 பவுண்டரிகளுடன் 31 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தனா். கேப்டன் சோனல் தினுஷா 5 பவுண்டரிகள், 1 சிக்ஸருடன் 52, அஞ்சலா பந்தாரா 13, ரமேஷ் மெண்டிஸ் 2 பவுண்டரிகள், 1 சிக்ஸா் உள்பட 32 ரன்களுக்கு வெளியேற்றப்பட்டனா். ஆட்டநேர முடிவில் கேசரா நுவந்தா 9, திலும் சுதீரா 1 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனா். இந்திய பௌலா்களில் மானவ் சுதா், குல்தீப் யாதவ், ரவீந்திர ஜடேஜா ஆகியோா் தலா 2, குா்னூா் பிராா் 1 விக்கெட் சாய்த்தனா்.