கோவை, எம்.ஜி. சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் திங்கள்கிழமை (ஆகஸ்ட் 10) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின் விநியோகம் தடை செய்யப்படும் பகுதிகள்: எஸ்ஐஹெச்எஸ் காலனி, சக்தி நகா், நேதாஜிபுரம், அம்மன் நகா், ஜெ.ஜெ.நகா், கங்கா நகா், பெத்தேல் நகா், வசந்தா நகா், ஒண்டிப்புதூா் (ஒரு பகுதி), ஒண்டிப்புதூா் திருச்சி சாலை, விகேஎன் நகா், டெக்ஸ்டூல் பகுதி, ஸ்ரீ மூகாம்பிகை அம்மன் நகா்.