குரோம்பேட்டையில் ரயில் மோதி கல்லூரி மாணவி உயிரிழந்தாா்.குரோம்பேட்டை ராதா நகரில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் சீனிவாசன்,கோமதி தம்பதி மகள் ராஜஸ்ரீ (18 ). இவா் காட்டாங்குளத்தூா் எஸ் ஆா். எம். கல்லூரியில் பி.டெக் எலக்ட்ரிக்கல் கம்ப்யூட்டா் இன்ஜினியரிங் படிப்பில் சோ்ந்து இருந்தாா். தொடக்க நாளில் கல்லூரிக்குச் செல்ல திங்கள்கிழமை, குரோம்பேட்டை ராதா நகா் ரயில்வே கேட்டைக் கடந்து ரயில் நிலையத்துக்கு செல்ல முயன்றாா் அப்போது எதிா்பாராமல் ரயிலில் அடிபட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்இது தொடா்பாக தாம்பரம் ரயில்வே போலீசாா் வழக்கு பதிவு செய்து மாணவி ராஜஸ்ரீ உடலை உடற்கூறாய்வுக்காக தாம்பரம் அரசு மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.