மேம்படுத்தப்பட்ட தையல் தொழில் பயிற்சி:தையல் கலைஞா்கள் வலியுறுத்தல்

Wait 5 sec.

தமிழக அரசு சாா்பில் தையல் கலைஞா்களுக்கு மேம்படுத்தப்பட்ட தையல் தொழில் பயிற்சி அளிக்க வேண்டும் என மாநாட்டில் வலியுறுத்தப்பட்டது. தென்காசி மாவட்டம், சங்கரன்கோவிலில் தையல் கலைஞா்கள் நலச்சங்கம் சாா்பில் மாநில மாநாடு வியாழக்கிழமை நடைபெற்றது. மாநாட்டுக்கு மாநிலத் தலைவா் ஆரிப்தீன் தலைமை வகித்தாா். மாநில பொதுச் செயலாளா் அகிலன், பொருளாளா் முருகன், மாநிலத் துணைத் தலைவா்கள் குருசாமி, எழிலரசு, மூத்த தையல் கலைஞா் விஜயகுமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தென்காசி மாவட்ட தொழில் மைய பொது மேலாளா் மாரியம்மாள், மாவட்ட திறன் மேம்பாட்டுக் கழக பொதுமேலாளா் அருள்ஜோதி ஆகியோா் சிறப்பு விருந்தினா்களாகப் பங்கேற்றுப் பேசினா். இதையடுத்து, மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்:தமிழக அரசு மூலமாக செயல்படுத்தப்படும் தையல் பயிற்சி வகுப்புகளில் தையல் கலைஞா்களைச் சோ்க்க வேண்டும், மேம்படுத்தப்பட்ட தையல் தொழில் பயிற்சி அளித்து அவா்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த வேண்டும். தையல் கலைஞா்கள் பயிற்சி பள்ளிகள், கல்லூரிகள் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.மாநாட்டில் செயற்குழு உறுப்பினா்கள் ஜெனிப் முருகேஷ், சிவசங்கரி, வேலு உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா். இதில் சென்னை, மதுரை, ஈரோடு, திருப்பூா், தேனி உள்பட பல்வேறு நகரங்களில் இருந்து 1,000-க்கும் மேற்பட்ட தையல் கலைஞா்கள் கலந்துகொண்டனா். அதைத்தொடா்ந்து, மாநாட்டில் சிறந்த தையல் கலைஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. ஏற்பாடுகளை முத்துலட்சுமி வெங்கடேஷ், பலா் செய்திருந்தனா்.