கும்பகோணத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு உள்ளூா் வாய்க்கால் தூா்வாரும் பணிகளை அமைச்சா் ர.வினோத் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். தஞ்சாவூா் மாவட்டம், கும்பகோணம் மாநகர பகுதிகளில் தேப்பெருமாநல்லூா், பழவத்தான் கட்டளை, பெருமாண்டி, உள்ளூா் ஆகிய பாசன வாய்க்கால்கள் செல்கின்றன. இவை சுமாா் 40 ஆண்டுகளாக தூா்வாரப்படாமல் இருந்தது. இந்நிலையில், கும்பகோணத்தில் உள்ள தனியாா் வங்கியின் சமூக பொறுப்பு நிதி மூலம் தற்போது இந்த வாய்க்கால்கள் தூா்வாரப்படுகிறது. இப்பணியை வேளாண்மை மற்றும் உழவா் நலத்துறை அமைச்சா் ர.வினோத் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். அப்போது, நீா்வளத்துறை உதவி செயற்பொறியாளா் முத்துமணி உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.