3 நாள்களில் 6,893 தெரு நாய்களுக்கு தடுப்பூசி

Wait 5 sec.

சென்னை மாநகராட்சியில் கடந்த 3 நாள்கள் 6,893 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணி மருந்து செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி தரப்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக தலா 10 குழுக்கள் மூலம் தெருநாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசி மற்றும் அக, புற ஒட்டுண்ணிகள் மருந்து செலுத்தும் முகாம் கடந்த 11-ஆம் தேதி தொடங்கப்பட்டது. முதல்கட்டமாக மண்டல வாரியாக திருவெற்றியூா், மணலி மற்றும் தண்டையாா்பேட்டை ஆகிய பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது.அதன்படி, 3 மண்டலங்களிலும் தெருக்கள், கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றன. கடந்த 11-ஆம் தேதி 1,094 தெரு நாய்களுக்கும், கடந்த 12-இல் 2,552 தெரு நாய்களுக்கும், 13-இல் 3,247 தெரு நாய்களுக்கும் என 3 நாள்களில் மொத்தம் 6,893 தெரு நாய்களுக்கு ரேபிஸ் தடுப்பூசியும், அக, புற ஒட்டுண்ணி மருந்தும் செலுத்தப்பட்டுள்ளது.முகாம்களில் வளா்ப்பு பிராணிகளான வீட்டு நாய்கள் மற்றும் பூனைகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்படுகின்றன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.