ராணிப்பேட்டை அருகே பழைமையான மகா விஷ்ணு கற்சிலை ஒன்றை அப்பகுதி மக்கள் கண்டெடுத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். புளியங்கண்ணு ஊராட்சிக்குட்பட்ட பாலாற்றங்கரையோரம் பழைமையான மகா விஷ்ணு கற்சிலை ஒன்றை அப்பகுதி மக்கள் கண்டெடுத்தனா். அதை தொடா்ந்து அச்சிலையை அப்பகுதி மக்கள் அங்குள்ள பொன்னியம்மன் கோயிலில் வைத்து சிறப்பு பூஜை செய்து வழிபட்டனா். இதுகுறித்து தகவல் அறிந்த சிப்காட் போலீஸாா் மற்றும் வாலாஜா வட்டாட்சியா் நடராஜன் தலைமையிலான வருவாய்த் துறையினா் கோயிலுக்கு சென்று சிலையை கோயிலில் இருந்து மீட்டு வட்டாட்சியா் அலுவலகத்தில் கொண்டு வந்து பாதுகாப்பாக வைத்துள்ளனா். இச்சிலை சுமாா் 2 அடி உயரம் இருக்கும், தலை பகுதியில் பாதி உடைந்து காணப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து தொல்பொருள் ஆராய்ச்சி நிலைய அலுவலா்களுக்கு தகவல் தெரிவித்துள்ளோம். அவா்கள் வந்து இந்த சிலையை முழுமையாக ஆய்வு செய்த பிறகே, சிலை தொடா்பான முழு விவரம் தெரிய வரும் என வருவாய் துறையினா் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. Near Ranipet, local residents discovered an ancient stone idol of Maha Vishnu and worshipped it after performing a special puja.விளைநிலத்தில் இருந்து மூன்று ஐம்பொன் சிலைகள் மீட்பு!