மகாராஷ்டிரத்தில் லேசான நில அதிர்வுகள்: வீடுகளில் விரிசல்; மக்கள் அச்சம்

Wait 5 sec.

மகாராஷ்டிரத்தில் நில அதிர்வுகள் காரணமாக வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டது. மகாராஷ்டிர மாநிலம், நாசிக் மாவட்டத்தில் லேசான நில அதிர்வைத் தொடர்ந்து சில பகுதிகளில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர். இருப்பினும் இந்த சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறினர்.தேசிய நில அதிர்வு மையத்தின் தகவல்படி, சனிக்கிழமை இரவு 10 மணிக்கு நாசிக்கில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 5.33 மணிக்கு 3.3 ரிக்டர் அளவில் நில அதிர்வு பதிவானது. மகாராஷ்டிரா-குஜராத் எல்லைக்கு அருகில் உள்ள ஹட்காட் மலைத்தொடரையொட்டிய பன்வாட் பகுதியில், பூமிக்கு அடியில் 5 கி.மீ ஆழத்தில் இந்த நில அதிர்வு மையம் அமைந்திருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். நாசிக் நகரம் மற்றும் சுர்கானா, கல்வான், தேவலா, சந்தவாட், பேத், திண்டோரி, நிபாட் ஆகிய தாலுகாக்களின் சில இடங்களில் அதிர்வுகள் உணரப்பட்டதால், பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சம் புகுந்தனர். சுர்கானா தாலுகாவில் உள்ள பாதர் மற்றும் திண்டோரி தாலுகாவில் உள்ள நானாஷி ஆகிய கிராமங்களில் உள்ள வீடுகளின் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாக அதிகாரிகள் தெரிவித்தனர்.அதிர்ஷ்டவசமாக இதில் காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. அப்பகுதியில் உள்ள அணைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது, ஆனால் அவற்றில் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை."பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. வதந்திகளை நம்ப வேண்டாம். இருப்பினும், அனைவரும் விழிப்புடன் இருந்து பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று மாவட்ட ஆட்சியர் ஆயுஷ் பிரசாத் கேட்டுக்கொண்டுள்ளார்.முன்னதாக, ஜூலை 25 முதல் 28 வரையிலும், ஆகஸ்ட் 6 ஆம் தேதியும் இம்மாவட்டத்தில் நில அதிர்வுகள் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. A mild earthquake followed by tremors hit Maharashtra's Nashik, causing cracks in houses in some areas of the district, officials said on Sunday. மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு