தொகுதி மறுவரையறையை நிராகரிக்க காரணம் என்ன? மாணிக்கம் தாகூர் விளக்கம்

Wait 5 sec.

தொகுதி மறுவரையறையை முற்றிலுமாக நிராகரிக்க காரணம் என்ன? என்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மாணிக்கம் தாகூர் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 9) விளக்கம் அளித்துள்ளார்.‘மோடி-லிமிட்டேஷன்’ என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி! கடந்த ஏப்ரல் 17 ஆம் தேதி 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை, 50 சதவிகிதம் தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும் கொண்டுவர மத்திய பா.ஜ.க. அரசு முயற்சிக்கிறது. ஏன் இந்த மசோதாவை நாம் முற்றிலுமாக நிராகரிக்க வேண்டும்? -மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தி நாட்டின் வளர்ச்சிக்கு வித்திட்ட தமிழ்நாட்டிற்குத் தண்டனையும், கட்டுப்படுத்தத் தவறிய வட மாநிலங்களுக்குப் பரிசும் அளிப்பது அப்பட்டமான அநீதி! 50 சதவிகித உயர்வு மூலம் உத்தரப் பிரதேசம் 80-ல் இருந்து 120 ஆகவும், தமிழ்நாடு 39-ல் இருந்து 59 ஆகவும் உயரும். இதனால் இரு மாநிலங்களுக்கும் இடையேயான தொகுதி இடைவெளி 41 இல் இருந்து 61 ஆக விரிவடையும்! எண்களின் பலமே முடிவுகளைத் தீர்மானிக்கும் நாடாளுமன்றத்தில், இந்த இடைவெளி அதிகரிப்பு தென்னக மாநிலங்களின் அரசியல் அதிகாரத்தை நிரந்தரமாகப் பறித்துவிடும். கடந்த காலத்தில் அன்னை இந்திரா காந்தியும், 2001 இல் வாஜ்பாய்யும் கொண்டு வந்த திருத்தங்கள் மூலமாகவே மக்களவை எண்ணிக்கை முடக்கப்பட்டது. அந்தப் பாதுகாப்பைத் தகர்க்கவே பாஜக துடிக்கிறது. சாதிவாரிக் கணக்கெடுப்பை முடிக்கும் முன்பே இதைச் செய்தால், பட்டியலின, பழங்குடியின மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொகுதிகளைச் சரியாகத் தீர்மானிக்க முடியாது என்று மாணிக்கம் தாகூர் குறிப்பிட்டுள்ளார்.தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தைக் கூட்டி நிறைவேற்ற, மத்திய பாஜக அரசு ஆலோசித்து வருகிறது.இதனால், தென் மாநிலங்களில் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் என்ற அச்சம் நிலவி வரும் சூழலில், தொகுதி மறுவரையறை விவகாரம் குறித்து முடிவெடுக்கத் தமிழக எம்.பி.க்களுடன் முதல்வர் விஜய் தலைமையில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.இந்தக் கூட்டத்தில், தவெக அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, நிர்மல் குமார், ராஜ்மோகன் உள்ளிட்டோரும், காங்கிரஸ், விசிக, கம்யூ., ஐயூஎம்எல் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 20 எம்.பி.க்களும் பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.‘மோடி-லிமிட்டேஷன்’ (MODI-LIMITATION) என்பது இந்தியாவின் இறையாண்மையையும் கூட்டாட்சி முறையையும் சீர்குலைக்கின்ற ஒரு மிகப்பெரிய அரசியல் சதி!கடந்த ஏப்ரல் 17 அன்று 'இந்தியா' கூட்டணியால் மக்களவையில் தோற்கடிக்கப்பட்ட இந்த ஆபத்தான மசோதாவை, 50% தொகுதி உயர்வு என ஆசை காட்டி மீண்டும்… pic.twitter.com/Lrl7ciJHOv— Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 9, 2026குடும்ப அட்டைதாரர்கள் விரல்ரேகை பதிவு செய்ய இன்றே கடைசி! Tamil Nadu Congress Committee President Manickam Tagore explained on Sunday (Aug. 9) the reasons for completely rejecting the constituency delimitation.