குடும்ப அட்டைதாரர்களின் குடும்ப உறுப்பினர்கள் கைரேகை பதிவு மேற்கொள்ள இன்றே(ஆக. 9) கடைசி நாளாகும்.தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம், 2013 ன் படி முன்னுரிமை மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டைகளின் ஆதார் விவரங்களை சரிபார்ப்பதற்காக மின்னணு குடும்ப அட்டையில் இணைக்கப்பட்ட அனைத்து பயனாளிகளின் விரல் ரேகை அடிப்படையிலான சரிபார்ப்பினை (eKYC) மேற்கொள்ள வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதன்படி குடும்ப உறுப்பினர்களுக்கு ஏதும் இடையூறுமின்றி இப்பணியினை செய்திட அறிவுறுத்தப்பட்டு கடந்த அக்டோபர் 2023 முதல் குடும்ப உறுப்பினர்களின் விரல் ரேகை சரிபார்ப்பு (eKYC) பணி நடைபெற்று வருகிறது. இந்த eKYC பதிவினை 100% நிறைவு செய்யும் பொருட்டு, தமிழகத்திலுள்ள அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் சிறப்பு முகாம் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறுகிறது.அனைத்து நியாய விலைக் கடைகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக் கொண்டு விற்பனை முனைய இயந்திரம் மூலமாக கைவிரல் ரேகை, கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் இகேஒய்சி மேற்கொள்ள வேண்டும். பிற மாநிலம், பிற மாவட்டங்களில் வேலை நிமித்தமாக தங்கி உள்ளவா்கள் அவர்களுக்கு அருகே உள்ள நியாய விலைக் கடையில் குடும்ப அட்டை நகலுடன் சென்று கைவிரல் ரேகையை பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.Today (August 9) is the last day for family members of ration cardholders to register their fingerprints.மீண்டும் வாய்ப்பு! குடும்ப அட்டை உறுப்பினர்கள் கைவிரல் ரேகை பதிவு முகாம்!