புதுச்சேரி காவல் துறைக்கு வண்ண விருது! ஷாலினி சிங்கிடம் வழங்கிய அமித் ஷா!

Wait 5 sec.

புதுச்சேரியில் நடைபெற்று வரும் வண்ண விருது வழங்கும் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்று, ஷாலினி சிங்கிடம் வண்ண விருதை வழங்கினார்.தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு இரண்டு நாள் பயணமாக சனிக்கிழமை மாலை சென்னை விமான நிலையம் வந்தடைந்த மத்திய அமைச்சர் அமித் ஷா, அங்கிருந்து தனி ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலைக்குச் சென்றார்.அங்கு, அருணாசலேஸ்வரா் கோயிலில் அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பளிக்கப்பட்டது. பின்னர், அமித் ஷா அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மன் சந்நிதிகளில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் கலந்துகொண்டு தரிசனம் செய்தார். அங்கிருந்து மத்திய அமைச்சர், காரில் புதுச்சேரிக்கு புறப்பட்டுச் சென்றார்.இந்த நிலையில், புதுச்சேரி காவல் துறையின் சிறப்பான சேவையை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படும் குடியரசுத் தலைவரின் வண்ண விருது வழங்கும் விழா இன்று (ஆக. 9) கோரிமேடு காவலர் திடலில் நடைபெற்று வருகிறது.இந்த நிகழ்வில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பங்கேற்றுள்ளார். முன்னதாக, திறந்த ஜீப்பில் சென்றவாறு காவல் துறையினரின் பலத்த அணிவகுப்பு மரியாதையை அமைச்சர் ஏற்றார்.இதனைத் தொடர்ந்து, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, குடியரசுத் தலைவரின் வண்ணக் கொடி விருதை, புதுச்சேரி காவல் துறை தலைமை இயக்குநர் ஷாலினி சிங்கிடம் வழங்கினார்.Union Minister Amit Shah is participating in the awards ceremony currently underway in Puducherry.புதுச்சேரிக்கு மத்திய அமைச்சர் அமித் ஷா இன்று வருகை: பலத்த பாதுகாப்பு ஏற்பாடுசொரிமுத்து அய்யனார் கோயிலுக்குச் செல்ல அனுமதி! குவிந்த பக்தர்கள்!