ஜென் ஸி தலைமுறையை தவறாக வழிநடத்த முயற்சி: ராஜிநாமா குறித்து தர்மேந்திர பிரதான்

Wait 5 sec.

நீட் போராட்டங்களின் போது, ஜென் ஸி தலைமுறையை தவறாக வழிநடத்த செய்யப்பட்ட முயற்சியால் ராஜிநாமா செய்ததாக முன்னாள் கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.நீட் வினாத்தாள் கசிவுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த ஜூன் 20 முதல் தில்லியின் ஜந்தர் மந்தரில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் நடத்தி வந்த போராட்டம் நாடு முழுவதும் பரவியது.இந்தக் கோரிக்கையை முன்நிறுத்தி நாடு முழுவதும் உள்ள மாணவர் அமைப்பினர், அரசியல் கட்சிகள் போன்றவை போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன. இதைத் தொடர்ந்து, மாணவர்களின் இந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த தர்மேந்திர பிரதான் தனது பதவியை ஜூலை 25 ஆம் தேதி ராஜிநாமா செய்தார்.இதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடியின் ஆலோசனைப்படி, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், மத்திய கல்வித்துறையின் புதிய அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்றார்.புவனேஸ்வரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் தர்மேந்திர பிரதான் பேசியதாவது:ஜென் ஸி தலைமுறையினர் நமது குழந்தைகள். சிலர் அவர்களைத் தவறாக வழிநடத்த முயன்றனர். அப்போது எனக்கு எந்த தனிப்பட்ட பிரச்சினைகளும் இருக்கவில்லை.இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் குறைந்தது இரண்டு கோடி குழந்தைகள் பிறக்கின்றன. கடந்த 10 ஆண்டுகளில் 20 கோடி குழந்தைகள் பிறந்தன. அவர்களுக்கு லட்சியங்கள் உள்ளன. அவர்கள் இந்தியாவை உலகத்தின் தலைசிறந்த நாடாக மாற்றுவார்கள். அந்தப் பதவி எனக்கு முக்கியமில்லை.அதனால்தான், பிரதமர் நரேந்திர மோடியை அணுகி மத்திய அமைச்சரவையிலிருந்து விலகுவதாக தெரிவித்தேன் எனக் கூறினார்.மூவா்ண கொடிகளுடன் மிளிரும் சதா் பஜாா்! லட்சக்கணக்கில் கொடி தயாரிக்கும் பாரம்பரிய குடும்பங்கள்!Former Education Minister Dharmendra Pradhan stated at an event in Bhubaneswar that he had resigned due to an attempt to mislead the Gen Z generation during the NEET protests.