ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய் சர்வதேச கிரிக்கெட்டில் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார்.ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான இரண்டாவது ஒருநாள் போட்டி நேற்று (ஆகஸ்ட் 7) நடைபெற்றது. மழை காரணமாக 47 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்ட இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 92 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்தை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் ஆல்ரவுண்டர்களில் ஒருவரான அஸ்மதுல்லா ஓமர்ஸாய் 33 ரன்கள் மற்றும் இரண்டு விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இதன் மூலம், சர்வதேச கிரிக்கெட்டில் அவர் 2000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை நிறைவு செய்துள்ளார். ! Our talented all-rounder @AzmatOmarzay unlocks the milestone of 2000 runs in international cricket. He gets there in his 95th inning, with an average of nearly 27 runs, a solitary… pic.twitter.com/SiHn7BPC7c— Afghanistan Cricket Board (@ACBofficials) August 7, 2026 ! After reaching 2,000 international runs earlier in the match, @AzmatOmarzay now unlocked another remarkable milestone by dismissing Paul Stirling to claim his 100th wicket in… pic.twitter.com/JzyfmUyVNC— Afghanistan Cricket Board (@ACBofficials) August 7, 20265 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் ஒருநாள் போட்டி மழை காரணமாக ஒரு பந்துகூட வீசப்படமால் கைவிடப்பட்ட நிலையில், இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.ஆப்கானிஸ்தான் - அயர்லாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் (ஆகஸ்ட் 10) நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.Afghanistan all-rounder Azmatullah Omarzai has achieved the milestone of 2,000 runs and 100 wickets in international cricket.ஹண்ட்ரட் தொடரிலிருந்து ஜெமிமா ரோட்ரிக்ஸ் விலகல்; ஆசிய கோப்பையில் விளையாடுவாரா?