திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் மத்திய உள்துறை அமைச்சர் அம்த் ஷா சாமி தரிசனம் மேற்கொண்டார். முன்னதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா சனிக்கிழமை மாலை சென்னை வருகை தந்தார். பின்னர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள உண்ணாமலை அம்மன் நகரில் உள்ள ஹெலிபேடில் வந்திறங்கினார். அங்கிருந்து திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரா் கோயிலுக்குச் சென்று, சிறப்பு அபிஷேகத்தில் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தார். தொடா்ந்து, கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீரமண மகரிஷி ஆசிரமத்தில் நடைபெறும் பூஜையில் கலந்துகொள்ள சென்றுள்ளார். இதையடுத்து, அவர் புதுச்சேரி புறப்பட்டுச் செல்கிறாா். அமித் ஷா வருகையையொட்டி, மத்திய ரிசா்வ் காவல் படையினா் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி. உதயகுமாா் தலைமையிலான போலீஸாா் அருணாசலேஸ்வரா் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள ரமணாசிரமம் உள்ளிட்ட மாநகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டுள்ளனா். மேலும் திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயில், ரமண மகரிஷி ஆசிரமம் உள்ளிட்ட பகுதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் டிரோன்கள், ஆளில்லா குட்டி விமானங்கள் உள்ளிட்டவை பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியா் வந்தனா காா்க் உத்தரவிட்டுள்ளாா். Union Home Minister Amit Shah offered prayers at the Annamalaiyar Temple in Thiruvannamalai.தொகுதி மறுவரையறைக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம்! முதல்வர் விஜய் உறுதி