தி ஹண்ட்ரட் தொடரிலிருந்து இந்திய வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் காயம் காரணமாக விலகியுள்ளார். தி ஹண்ட்ரட் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின் ஜெமிமா ரோட்ரிக்ஸ் சதர்ன் பிரேவ் அணிக்காக விளையாடி வந்தார். அந்த அணிக்காக நடப்பு சீசனில் 6 போட்டிகளில் விளையாடிய ஜெமிமா ரோட்ரிக்ஸ் 143 ரன்கள் எடுத்துள்ளார்.இந்த நிலையில், காயம் காரணமாக அவர் ஹண்ட்ரட் தொடரிலிருந்து விலகியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.காயம் காரணமாக விலகியுள்ள ஜெமிமா ரோட்ரிக்ஸுக்குப் பதிலாக சதர்ன் பிரேவ் அணியில் ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர் சார்லி நாட் சேர்க்கப்பட்டுள்ளார்.மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடர் வருகிற ஆகஸ்ட் 28 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்திய அணி வருகிற ஆகஸ்ட் 30 தேதி தாய்லாந்துக்கு எதிராக அதன் முதல் போட்டியில் விளையாடவுள்ளது.காயம் காரணமாக ஹண்ட்ரட் தொடரிலிருந்து விலகியுள்ள ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் விளையாடுவாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. Jemima Rodriguez pulls out of The Hundred due to injuryஒரு வீடு வேண்டும்! நள்ளிரவில் உத்தரகண்ட் முதல்வரிடம் ரிஷப் பந்த் கோரிக்கை