யுவன் குரலில் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தின் லிரிக்கல் விடியோ!

Wait 5 sec.

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா திரைப்படத்தில் இருந்து யுவன் ஷங்கர் ராஜா பாடிய பாடலின் லிரிக்கல் விடியோ வெளியாகியுள்ளது.லைகா தயாரிப்பில் இயக்குநராக அறிமுகமாகும் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய்யின் சிக்மா படத்தில் சந்தீப் கிஷன் நாயகனாக நடிக்கிறார். ஃபரியா அப்துல்லா நாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்தில் ராஜு சுந்தரம், சம்பத் ராஜ், ஷிவ் பண்டிட், அன்பு தாசன், யோக் ஜபே, மகலட்சுமி, ஷீலா ராஜ்குமார், கமலேஷ், கிரண் கொண்டா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். பாடலாசரியர் விவேக் எழுதியுள்ள இந்தப் பாடலை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். சமீபத்திய நேர்காணல் ஒன்றில் ஜேசன் சஞ்சய் தான் யுவனின் மிகத் தீவிரமான ரசிகர் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. சிக்மா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகக் கூறப்பட்டது. இந்தப் படம் கடந்த ஜூலையில் வரவிருந்தது பின்னர் ஒத்திவைக்கப்பட்டது.இந்தப் படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை என்பதும் கவனிக்கத்தக்கது.முத்தையா இயக்கத்தில் அருண் விஜய்..! இருளன் படத்தின் போஸ்டர்!Lyrical video of Jason Sanjay's 'Sigma' featuring Yuvan's vocals!