9 நாள்களாக உண்ணாவிரதம் இருப்பவரை காவல் துறை தாக்குவது சரியா?

Wait 5 sec.

தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து 9 நாள்களாக தொடர் உண்ணாவிரதம் இருப்பவர் மீது காவல் துறை தாக்குதல் நடத்துவது சரியா? என கரப்பான்பூச்சி ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜீத் தீப்கே கேள்வி எழுப்பியுள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது:''ஜார்க்கண்ட்டில் அரசுத் தேர்வு முறைகேடுகளைக் கண்டித்து மாணவர்கள் தன்னெழுச்சியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால், ஜூன் 20 ஆம் தேதி ஜந்தர் மந்தரில் என்ன நடந்ததோ? அதுவே ஜார்க்கண்ட்டிலும் நடந்துள்ளது. உரிமைக்காக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது காவல் துறை தடியடி நடத்தியுள்ளது; கண்ணீர் புகைக்குண்டுகள் வீசப்பட்டுள்ளன. தடியடியும் கண்ணீர் புகைக்குண்டுகளும் ஏதேனும் அரசியல் கட்சிகளின் போராட்டத்தில் வீசப்பட்டுள்ளதா? இது எனக்கு புரியவில்லை. ஏன் மாணவர்கள் மட்டுமே குறிவைக்கப்படுகிறார்கள்.ஜார்க்கண்ட்டில் போராட்டத்தை வழிநடத்தி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தேவேந்திர மஹதோவுடன் நேற்று பேசினேன். காவல் துறை தாக்குதலில் அவர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார். 9 நாள்களாக உண்ணாவிரதம் இருந்து வருபவரை காவல் துறை தாக்கியுள்ளது. அவரின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. ஜந்தர் மந்தரோ, ஜார்க்கண்ட்டோ, எந்த அரசாக இருந்தாலும் மாணவர்களை துன்புறுத்துவதில் இரக்கம் காட்டுவதில்லை. அவர்கள் தங்கள் உரிமைகளுக்காகதான் போராடுகிறார்கள். வாக்கு வங்கிகளுக்காக அல்ல. அவர்களை இதுபோன்று நடத்துவது முறையல்ல'' எனக் குறிப்பிட்டார். ஜார்க்கண்ட் மாநிலத் தலைநகர் ராஞ்சியில், சட்டப்பேரவையை நோக்கி பேரணியாகச் சென்ற போராட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். மேலும் தண்ணீரை பீய்ச்சியடித்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். சிஜேபி தொடங்கியுள்ள பிரசாரத்தின் நோக்கம் என்ன? அபிஜீத் தீப்கே விளக்கம் Is it right for police to attack Devender Mahato who has been on a hunger strike for nine days