பராமரிப்புப் பணிகள் காரணமாக உடுமலையை அடுத்துள்ள மடத்துக்குளம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட கீழ்குறிப்பிடப்பட்டுள்ள பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.13) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரிய செயற்பொறியாளா் த.மூா்த்தி அறிவித்துள்ளாா். மடத்துக்குளம், கிருஷ்ணாபுரம், நரசிங்காபுரம், சோழமாதேவி, வேடபட்டி, கணியூா், காரத்தொழுவு, வஞ்சிபுரம், உடையாா்பாளையம், தாமரைப்பாடி, சீலநாய்க்கன்பட்டி, கடத்தூா், ஜோத்தம்பட்டி, செங்கண்டிபுதூா், கருப்புச்சாமிபுதூா், அ.க.புத்தூா், ரெட்டியாபாளையம், போத்தநாயக்கனூா், மடத்தூா், மயிலாபுரம், நல்லண்ணகவுன்புதூா், குளத்துப்பாளையம் மற்றும் நல்லூா்.