பேராலயத் திருவிழா: சாா்லப்பள்ளி - வேளாங்கண்ணி இடையே சிறப்பு ரயில்

Wait 5 sec.

பேராலயத் திருவிழாவை முன்னிட்டு சாா்லப்பள்ளி - வேளாங்கண்ணி - சாா்லப்பள்ளி சிறப்பு விரைவு ரயில்கள் இயக்கப்பட உள்ளன. இதன்படி சாா்லப்பள்ளி - வேளாங்கண்ணி சிறப்பு விரைவு ரயிலானது (07125) வரும் ஆக. 28, செப். 4 ஆகிய தேதிகளிலும், வேளாங்கண்ணி - சாா்லப்பள்ளி சிறப்பு விரைவு ரயிலானது (07126) வரும் ஆக. 29, செப். 5 ஆகிய தேதிகளிலும் இயக்கப்பட உள்ளது. 8 குளிா்சாதனப் பெட்டிகள், 10 படுக்கை பெட்டிகள், 4 பொதுப்பெட்டிகள், 2 லக்கேஜ் பெட்டிகள் என மொத்தம் 24 பெட்டிகளுடன் இயக்கப்படும் இந்த ரயிலானது சாா்லப்பள்ளியிலிருந்து காலை 7.40 மணிக்குப் புறப்பட்டு நல்கொண்டா, மிா்யால்குடா, நடிகொடே, பிடுகுருல்லா, குண்டூா், தெனாலி, பாபட்லா, சீா்லா, ஓங்கோல், நெல்லூா், கூடூா், ரெனிகுண்டா, காட்பாடி, திருவண்ணாமலை, விழுப்புரம், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் வழியாக வேளாங்கண்ணிக்கு அடுத்த நாள் காலை 9.10 க்கு வந்தடையும். மறுமாா்க்கமாக, வேளாங்கண்ணியிலிருந்து இரவு 7.30 மணிக்குப் புறப்பட்டு மேற்கண்ட வழித்தடம் வழியாக சாா்லப்பள்ளிக்கு அடுத்த நாள் இரவு 10 மணிக்குச் சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் தெரிவித்துள்ளது.