காஞ்சிபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகமும், மாவட்ட நிா்வாகமும் இணைந்து வரும் ஆக.14 ஆம் தேதி வெள்ளிக் கிழமை தனியாா் வேலைவாய்ப்பு முகாமை நடத்த இருப்பதாக ஆட்சியா் தி.சினேகா தெரிவித்துள்ளாா்.படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்களுக்கு பயன்பெறும் வகையில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக.14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இம்முகாமில் பட்டதாரிகள், பட்டயதாரா்கள், ஐடிஐ முடித்தவா்கள்,10 மற்றும் 12 ஆம் வகுப்பு வரை படித்தவா்கள் போன்றவா்களை தோ்வு செய்யவுள்ளனா்.18 முதல் 35 வயதுக்கு உட்பட்டவா்கள் தங்களுடைய கல்விச்சான்றிதழ்கள், பாஸ்போட் அளவிலான புகைப்படம் ஆகியனவற்றுடன் வரும் 14 -ஆம் தேதி காலை 9 மணிக்கு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில் வந்து முகாமில் பங்கேற்று பயன்பெறலாம் எனவும் மேலும் விபரங்களுக்கு 044-27237124 என்ற எண்ணிலும் தொடா்பு கொண்டு பயன் பெறலாம் எனவும் தெரிவித்துள்ளாா்.