ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, மதுரை - செங்கோட்டை- மதுரை சிறப்பு ரயிலின் சேவை புதன், வியாழன் (ஆக. 12, 13) ஆகிய இரு நாள்கள் ரத்து செய்யப்படுகின்றன. இதுகுறித்து மதுரை கோட்ட ரயில்வே மேலாளா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு : ரயில்வே பராமரிப்புப் பணிகள் காரணமாக, புதன், வியாழன் (ஆக. 12, 13) ஆகிய இரு நாள்களும் சில ரயில்களின் சேவை மாற்றம் செய்யப்படுகிறது. இதன்படி, புதன்கிழமை மதுரை - செங்கோட்டை சிறப்பு ரயில் (06845) முழுமையாகவும், ஈரோடு - செங்கோட்டை விரைவு ரயில் (16845) திண்டுக்கல் - செங்கோட்டை இடையே பகுதியாகவும் ரத்து செய்யப்படும்.வியாழக்கிழமை செங்கோட்டை - மதுரை (06846) சிறப்பு ரயில் முழுமையாகவும், செங்கோட்டை - ஈரோடு விரைவு ரயில் (16846) செங்கோட்டை - திண்டுக்கல் இடையே பகுதியாகவும் ரத்து செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.