சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று (ஆக. 12) எந்தெந்த வழக்குகள் விசாரணை?

Wait 5 sec.

முதல்வர் விஜய்யின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட தேர்தல் வழக்கு உள்ளிட்ட முக்கிய வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று (ஆக. 12) விசாரணைக்கு வருகின்றன.பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்ற முதல்வர் விஜய், வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன், பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோரின் வெற்றிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு இன்று விசாரணை செய்யப்படுகிறது.சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் அதிமுகவிலிருந்து ராஜிநாமாவை ஏற்று பேரவைத் தலைவர் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக அதிமுக கொறடா அக்ரி கிருஷ்ணமூர்த்தி தொடர்ந்த வழக்கும் இன்று விசாரிக்கப்படுகிறது.சென்னை ஆர்.கே.நகர் தொகுதி எம்எல்ஏ-வும், நிதி அமைச்சருமான மரியவில்சன், 2022 ஆம் ஆண்டில், சொத்து தகராறில் சகோதரர் மரியகுலோத், அவரது மனைவி கெரோலின் ஆகியோரை உருட்டுக்கட்டையால் தாக்கிய வழக்கில் அமைச்சர் மரிய வில்சன் சமரச தீர்வு மையத்தில் இன்று ஆஜராகிறார்.Key cases, including the election petition challenging the victory of Chief Minister Vijay, are coming up for hearing at the Madras High Court today (August 12).