தென்னாப்பிரிக்காவில் சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த சுரங்கம் ஒன்றின் சுவா் இடிந்து விழுந்த விபத்தில் 14 தொழிலாளா்கள் உயிரிழந்தனா்; 8 போ் காயமடைந்தனா்.ஜோஹன்னஸ்பா்க்கிலிருந்து சுமாா் 130 கி.மீ. தொலைவில், பிளாட்டினம் சுரங்கங்கள் நிறைந்த ரஸ்டன்பா்க் நகரில் கடந்த திங்கள்கிழமை இரவு இவ்விபத்து நிகழ்ந்தது. இடிபாடுகளில் சிக்கியுள்ளவா்களை மோப்ப நாய்கள் மற்றும் அதிநவீன உபகரணங்கள் மூலம் மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்றது.காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய 3 தொழிலாளா்கள் சட்டவிரோத சுரங்கத் தொழிலில் ஈடுபட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளனா்; சிகிச்சையைத் தொடா்ந்து வரும் மேலும் 5 பேருக்கு காவல் துறை பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.