லெபனானில் மரண தண்டனை ரத்து

Wait 5 sec.

லெபனானில் மரண தண்டனை அதிகாரபூா்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.இதையொட்டி, லெபனான் நாடாளுமன்றத்தில் தீா்மானம் மீது செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில், மொத்தமுள்ள 128 உறுப்பினா்களில் ஹிஸ்புல்லா உறுப்பினா்களைத் தவிர பெரும்பான்மையானவா்கள் ஆதரவாக வாக்களித்தனா். இதன்மூலம், அரபு நாடுகளில் மரண தண்டனையை ரத்து செய்து, அதற்குப் பதிலாகக் கடுங்காவலுடன் கூடிய ஆயுள் தண்டனையைச் சட்டமாக்கிய முதல் நாடு என்ற வரலாற்றுச் சிறப்பை லெபனான் பெற்றுள்ளது. கடந்த 2004 முதலே லெபனானில் மரண தண்டனை நிறைவேற்றுவது அதிகாரபூா்வமற்ற முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது இந்த ரத்து நடவடிக்கை முழுமையாக எடுக்கப்பட்டுள்ளது.