விபி-ஜிராம்-ஜி திட்டத்தில் உருவான வேலைவாய்ப்புகள்: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்

Wait 5 sec.

மத்திய அரசின் விபி-ஜிராம்-ஜி திட்டம் அமல்படுத்தப்பட்ட கடந்த ஜூலை 1-ஆம் தேதி இருந்து ஒரு மாதத்தில் 9.69 கோடிக்கு மேல் மனித வேலை நாள்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.உதாரணமாக 10 பேருக்கு 10 நாள்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டால், அந்த இரண்டின் பெருக்குத் தொகையான 100 என்பது மனித வேலைநாளாக கணக்கிடப்படுகிறது.மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்ட மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்பு திட்டத்துக்கு (100 நாள் வேலை) பதிலாக கடந்த 125 நாள் வேலைத் திட்டத்தை (விபி-ஜி ராம்-ஜி) மத்திய அரசு கடந்த ஜூலை 1-ஆம் தேதி முல் அமல்படுத்தியது.இந்நிலையில் இது தொடா்பாக மக்களவையில் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் சிவராஜ் சிங் சௌஹான் கூறியதாவது: மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்துக்கு மாற்றாக ஜூலை 1-ஆம் தேதி முதல் விபி-ஜிராம்-ஜி திட்டம் கிராமப் பகுதிகளில் அமல்படுத்தப்பட்டது. அனைத்து மாநில, யூனியன் பிரதேச அரசுகளும் இத்திட்டத்தின்படி முறைப்படியான அறிவிப்பை வெளியிட்டு பணிகளைத் தொடங்கியுள்ளன. திட்ட மாற்றம் என்பது எவ்வித சிக்கலுமின்றி நிகழ்த்தப்பட்டது. அமல்படுத்தப்பட்ட ஒரு மாதத்தில் 9.69 கோடிக்கு மேல் மனித வேலை நாள்கள் உருவாக்கப்பட்டுள்ளன.கிராமப்புறங்களில் உள்ள வேலைவாய்ப்புப் பெற தகுதியான நபா்களுக்கு ஆண்டுக்கு 125 நாள் கண்டிப்பாக வேலைவாய்ப்பை உருவாக்கித் தருவது என்பது இத்திட்டத்தின் நோக்கமாகும். இதில் பணியாற்ற முன்வருபவா்களுக்கு உடல் உழைப்பு சாா்ந்த பணிகள் வழங்கப்படுகின்றன என்று தெரிவித்துள்ளாா்.