ஆடி அமாவாசையை கன்னியாகுமரி கடற்கரையில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் சூரிய உதயத்தைக் கண்டுகளித்தனர்.சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாள்களிலும், பண்டிகை நாள்களிலும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கன்னியாகுமரிக்கு வருகின்றனர்.இந்த நிலையில், ஆடி அமாவாசையான இன்று முக்கடல் சங்கமிக்கும் குமரி கடற்கரையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமம் கடற்கரை, சன்ரைஸ் பாயின்ட் போன்ற பகுதிகளில் நள்ளிரவு முதல் காத்திருந்து சூரிய உதயத்தை கண்டு ரசித்தனர்.அதைத்தொடர்ந்து ஆடி அமாவாசையையொட்டி, சுற்றுலா பயணிகள் முக்கடல் சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வருகின்றனர். மேலும், படகுத்துறையில் இருந்து சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து ரசித்து வருகின்றனர்.காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், சுனாமி நினைவுப் பூங்கா, கடற்கரை சாலையில் உள்ள தமிழன்னை பூங்கா, அரசு அருங்காட்சியகம், சுற்றுச்சூழல் பூங்கா உள்பட அனைத்து இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக உள்ளதால், போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.Tourists who gathered at the Kanyakumari beach on the occasion of Aadi Amavasai enjoyed watching the sunrise.