காலிறுதிக்கு முன்னேறியது நார்த்ஈஸ்ட் யுனைடெட்!

Wait 5 sec.

துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 30-ஆவது ஆட்டத்தில், நார்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி 3-1 கோல் கணக்கில் ஸ்ரீநகர் எஃப்சி1 அணியை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. இந்த ஆட்டத்தில் நார்த்ஈஸ்ட் அணிக்காக பார்த்திப் சுந்தர் கோகோய் 11 மற்றும் 54-ஆவது நிமிஷங்களிலும், அலாதீன் அஜாரே 68-ஆவது நிமிஷத்திலும் கோல் அடித்தனர். ஸ்ரீநகர் அணிக்காக முகமது இலியாஸ் 71-ஆவது நிமிஷத்தில் ஆறுதல் கோல் அடித்தார். இந்த வெற்றியை அடுத்து நார்த்ஈஸ்ட் அணி தொடர்ந்து 3 வெற்றிகளுடன் காலிறுதிக்கு முன்னேறியது. ஸ்ரீநகர் எஃப்சி 2-ஆவது தோல்வியுடன் போட்டியிலிருந்து வெளியேறியது. நாங்சே வெற்றி: மேகாலய மாநிலம், ஷில்லாங்கில் நடைபெற்ற 31-ஆவது ஆட்டத்தில், நாங்சே எஸ்எஸ் & சிசி அணி 7-0 கோல் கணக்கில் மும்பை எஃப்சியை அபார வெற்றி கண்டது. அந்த அணிக்காக ஹார்டி கிளிஃப் (11', 79'), கிட்போகிளாங் பாலே (41'), செஸ்டர்பால் லிங்டோ (56'), தவன்சா கார்லோஸ் (77', 82'), ஷீன் ஸ்டீவன்சன் (89') ஆகியோர் கோல் அடித்தனர். நாங்சே அணி முதல் வெற்றியுடன் காலிறுதி நம்பிக்கையில் இருக்க, மும்பை அணி 3-ஆவது தோல்வியுடன் வெளியேறியது.