நிகர அந்நிய நேரடி முதலீடு குறைந்ததன் பின்னணி

Wait 5 sec.

உற்பத்தி, சேவைத் துறைகளில் மேற்கொள்ளப்படுவது உண்மையான அந்நிய நேரடி முதலீடாகும். வெளிநாடுவாழ் இந்தியர்களின் முதலீடுகளும் அந்நிய முதலீட்டில் அடங்கும்.இது நமது பொருளாதாரத்தின் பலவீனத்துக்கான அறிகுறி என்று விமர்சனங்கள் எழுந்துள்ளன. ஆனால், மொத்த அந்நிய நேரடி முதலீடுகள் தொடர்ந்து வலுவாக இருப்பதை பொருளாதாரத்தின் பலமாகக் கருதுகிறார் நாட்டின் தலைமை பொருளாதார ஆலோசகர். வெளிநாட்டு நிறுவனங்கள் தங்கள் லாபத்தை தாய்நாட்டுக்கு அனுப்புவதும், இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் மேற்கொள்ளும் முதலீடுகளுமே நிகர அந்நிய நேரடி முதலீடு குறைந்ததற்குக் காரணம் என்கிறார் அவர்.வெளிநாட்டு நிறுவனம் இந்தியாவில் ஈட்டிய ஈவுத்தொகையை தனது தாய்நாட்டுக்கு அனுப்பும்போது, அது செலுத்தல் சமநிலை கணக்கின் நடப்புக் கணக்கில் முதலீட்டு வருமானத்தின் கீழ் பதிவு செய்யப்படும்.இந்தியாவுக்குள் புதிய முதலீடாக ஒரு டாலர் வந்தால் இந்தியாவை விட்டு 1.50 டாலர் வெளியேறுகிற நிலை ஏற்பட்டுள்ளது. பத்தாண்டுகளுக்கு முன்பு ஒரு டாலர் உள்ளே வந்தால் 56 சென்ட்கள் மட்டுமே வெளியேறின.ஆகவே, அந்நிய முதலீடுகளின் தரம், நோக்கம், பொருளாதாரத்தில் நீண்ட காலத்தில் ஏற்படுத்தும் தாக்கம் ஆகியவற்றையும் கவனத்தில் கொண்டும், புள்ளிவிவரங்களை அடிப்படையாகக் கொண்டும் கொள்கைகளை வகுக்க வேண்டும்.முழுக் கட்டுரையும் படிக்க...