தென் கொரியாவில் நடைபெறும் கொரியா மாஸ்டர்ஸ் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் அஷ்மிதா சாலிஹா, ரக்ஷிதா ஸ்ரீ ஆகியோர் காலிறுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர். மகளிர் ஒற்றையர் காலிறுதிக்கு முந்தைய சுற்றில், அஷ்மிதா சாலிஹா 20-22, 21-15, 21-19 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜப்பானின் ஹினா அகெசியை வீழ்த்தினார். ரக்ஷிதா ஸ்ரீ 18-21, 21-19, 21-18 என்ற கேம்களில், போட்டித்தரவரிசையில் 3-ஆம் இடத்திலிருந்த இந்தியாவின் தன்வி சர்மாவை தோற்கடித்து அசத்தினார். இதையடுத்து காலிறுதியில் அஷ்மிதா - ரக்ஷிதா மோதுகின்றனர். போட்டியில் தற்போது களத்திலிருக்கும் இந்தியர்கள், இவர்கள் இருவர் மட்டுமே. ஆடவர் இரட்டையரில், கிருஷ்ணபிரசாத் கராகா/பிருத்வி கிருஷ்ணமூர்த்தி ராய் இணை 7-21, 8-21 என்ற வகையில், மலேசியாவின் மான் வெய் சோங்/சோ வூய் யிக் கூட்டணியிடம் தோல்வியுற்றது.