துராந்த் கோப்பை கால்பந்து போட்டியின் 23-ஆவது ஆட்டத்தில் ஸ்போர்டிங் கிளப் டெல்லி அணி 7-0 கோல் கணக்கில் இலங்கை ராணுவ அணியான டிஃபெண்டர்ஸ் எஃப்சியை வெள்ளிக்கிழமை வீழ்த்தியது. டெல்லி அணிக்காக ரோட்ரிகோ அராஜோ 5 கோல்கள் (6', 8', 12', 89', 90+5') அடித்து அசத்த, முகமது அய்மின் (34'), ஜுவான் செபாஸ்டியன் (90+2') ஆகியோரும் ஸ்கோர் செய்தனர். இதனிடையே, கொல்கத்தாவில் 24-ஆவது ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எஃப்சி 5-0 கோல் கணக்கில் செளத் யுனைடெட் எஃப்சியை வென்றது. அந்த அணிக்காக டேனியல் ரமிரெஸ் (7'), முகமது பாசிம் (24'), ஹர்திக் பாட் (73'), பிபின் சிங் (81'), டேவிட் லாலன்சங்கா (90+5') ஆகியோர் கோல் அடித்தனர்.