வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என மத்திய அரசுக்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.இந்தியாவின் பல்வேறு மதப் பிரிவுகளைச் சேர்ந்த முக்கிய மதத் தலைவர்கள் இடம்பெற்ற, திமுக எம்.பி. வில்சன் தலைமையிலான சிறுபான்மையினருக்கான கூட்டு நடவடிக்கைக் குழு மன்றத்தின் பிரதிநிதிகள், ஆக. 6 ஆம் தேதியில் மத்திய உள்துறை அமைச்சரைச் சந்தித்தனர்.மக்களவையில் மார்ச் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் (FCRA) 2026-ஐத் திரும்பப் பெறவும், எஃப்சிஆர்ஏ சட்டத்தின் பிரிவு 15-ஐ நீக்கவும் அல்லது அதற்கு மாற்றாக, இச்சட்ட முன்வரைவையும், வெளிநாட்டு நிதிப் பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம், 2010-ன் செயல்பாடுகள் குறித்த விரிவான ஆய்வையும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பவும் உள்துறை அமைச்சரிடம் வில்சன் எம்.பி. தலைமையிலான குழுவினர் வலியுறுத்தினர்.முன்மொழியப்பட்டுள்ள இந்தச் சட்ட முன்வரைவின் பாரதூரமான விளைவுகளைக் கருத்தில்கொண்டு, அதன் விதிகளைத் தொடக்கத்திலிருந்தே எதிர்த்து வரும் திமுக, இந்தக் கோரிக்கையை ஆதரிக்கிறது.சிறுபான்மையினரின் உரிமைகளைக் கருத்தில் கொண்டு, மன்றத்தின் கோரிக்கையை மத்திய அரசு பரிசீலித்து, தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரிலேயே உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.தவெக அரசு நடத்தும் தமிழக எம்.பி.க்கள் கூட்டத்தில் திமுக பங்கேற்காது: கலந்தாய்வுக் கூட்டத்துக்கான தேவை என்ன? - கனிமொழி கேள்விMK Stalin urged the Union Minister Amit Shah to withdraw the FCRA Amendment Bill 2026