தமிழகம் முழுவதும் இந்துசமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அனைத்துக் கோயில்களிலும் பக்தர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வழிபாடு நடத்த பல புதிய கட்டுப்பாடுகளை தமிழக அரசு கொண்டு வந்துள்ளது.பக்தர்கள் வரவேற்கும் வகையில், இனி எந்த முக்கிய பிரமுகர்களின் வருகையும், கோயில் பக்தர்களுக்கு இடையூறு இல்லாமல் இருக்க வேண்டும் என்பது வலியுறுத்தப்பட்டுள்ளது.அதுபோலவே, அண்மைக் காலமாக கூட்டம் இல்லாத பெரிய பெரிய கோயில்களில், இளைஞர்களும் இளைஞிகளும் சினிமா பாடல்களை ஒலிபரப்பவிட்டு, அதற்கேற்ப நடனமாடி விடியோ ரீல்ஸ்களை எடுப்பதை மக்கள் பார்த்திருக்க வாய்ப்பு உண்டு.இதனைப் பார்த்து இதற்கு எல்லாம் இல்லையா ஒரு என்டு என்று நினைத்து வருந்திச் சென்ற பக்தர்களுக்காகவே இந்துசமய அறநிலையத்துறை ஒரு புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.கோயிலில் சுவாமி தரிசனம் செய்யும் இடத்துக்குள் பக்தர்கள் செல்போன் கொண்டு செல்வதைத் தடுக்கும் வகையில், கோயில்களில் செல்போன் பாதுகாப்புப் பெட்டகங்கள் அமைக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.எனவே, கோயிலுக்குள் யாரும் விடியோ, செல்ஃபி, ரீல்ஸ்கள் எடுப்பதை தடுக்க வேண்டும் எனறும், கோயிலுக்குள் புனிதம் காக்கப்பட வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.இந்துசமய அறநிலையத் துறை உத்தரவுகளைப் பிறப்பத்தாலும், கோயில் நிர்வாகம்தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்று ரீல்ஸ் எடுக்கும் நபர்களிடமிருந்து செல்போன்கள் பறிமுதல் செய்யப்படும் என்பது போன்ற வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஆங்காங்கே வைப்பது, ரீல்ஸ் எடுப்பவர்கள் பற்றி புகார் அளித்தால் இலவச தரிசனம் என்பது போன்ற வசதிகளை ஏற்படுத்தினால் நிச்சயம் பலனளிக்கலாம் என்று கோயிலுக்கு வரும் பக்தர்கள் கருதுகிறார்கள்.அண்மைக் காலமாக இன்ஸ்டாவில் பிரபலமான பலரும் கோயிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்து ரீல்ஸ் எடுத்து வெளியிடுவதும் அதிகரித்துள்ளதாகக் கூறப்படுகிறது.மற்றொரு அறிவிப்பில்,கோயில் நிர்வாகங்களுக்கு இந்துசமய அறநிலையத் துறை வெளியிட்டிருக்கும் அறிவுறுத்தலில், ஒரு முக்கிய பிரமுகரின் வருகை குறித்து கோயில் அதிகாரிகளுக்குக் குறைந்தபட்சம் ஒரு நாள் முன்னதாகத் தெரிவிக்கப்பட வேண்டும், அப்போதுதான் தேவையான ஏற்பாடுகளைச் செய்ய முடியும். குறுகிய கால அவகாசத்தில் தகவல் பெறப்பட்டால், செயல் அதிகாரிக்கு உடனடியாக தெரிவிக்கப்பட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதுபோல, முன்கூட்டியே அறிவித்துவிட்டு கோயிலுக்கு வரும் முக்கிய பிரமுகர்கள் உடன், கோயில் அதிகாரிகள், அவர்களது பாதுகாவலர்கள் உள்ளிட்டோர் மட்டுமே கோயிலுக்குள் அனுமதிக்கப்பட வேண்டும். அவர்களது வருகை, எந்த வகையிலும் கோயிலுக்கு வந்திருக்கும் பக்தர்களை பாதிக்காத வகையில் அவர்கள் சுவாமி தரிசனம் செய்ய வழி வகை செய்யப்பட வேண்டும்.Important information to know before visiting the temple Even if you are a VIP!வங்கிக் கணக்கை கொடுங்கள்; பணம் கொடுக்கிறோம் என்றால்... ஆர்பிஐ அறிவுறுத்தல்!