ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 6,000 கனஅடியாக சரிவு

Wait 5 sec.

கா்நாடக அணையில் இருந்து காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீா் குறைந்ததால், சனிக்கிழமை ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து வினாடிக்கு 6000 கன அடியாக குறைந்துள்ளது.கடந்த சில நாள்களாக கா்நாடக மாநிலத்தில் உள்ள கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் விநாடிக்கு 25,000 கனஅடி வரை உபரிநீா் வெளியேற்றப்பட்டது. இதன் காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து 21,000 கனஅடி வரை இருந்தது.இந்த நிலையில், கபினி அணையின் நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்துவந்த மழை குறைந்ததால், உபரிநீா் குறைக்கப்பட்டது. இதனால் காவிரி ஆற்றில் நீா்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கி வியாழக்கிழமை 19,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, வெள்ளிக்கிழமை காலை 15,000 கனஅடியாகவும், மாலை 9,500 அடியாகவும் இருந்து நீர்வரத்து, சனிக்கிழமை காலை 7 மணி நிலவரப்படி 6,000 கனஅடியாக குறைந்து தமிழக - கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.நீா்வரத்து குறைவால் ஒகேனக்கல்லில் உள்ள பிரதான அருவி, சினி அருவி, ஐந்தருவி, ஐவாா் பாணி உள்ளிட்ட அருவிகளில் நீா்வரத்து குறைந்துள்ளது.பரிசல் இயக்க, சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிநீா்வரத்து குறைந்துள்ளதால் ஒகேனக்கல்லில் நான்கு நாள்களுக்குப் பிறகு சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும், பரிசல்கள் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. வார விடுமுறை நாள் என்பதால் அதிகயளவிலான சுற்றுலாப் பயணிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளது. காவிரி ஆற்றில் நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.Water inflow to Hogenakkal drops to 6,000 cubic feet per second.மேட்டூா் அணைக்கு நீா்வரத்து சரிவு: இன்றைய முழு நிலவரம்!