ஒசூா் அரசு மருத்துமனைில் உள்நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கும் பணியாளா் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டாா். ஒசூா் இராயக்கோட்டை சாலையில் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை உள்ளது 419 படுக்கைகளை கொண்ட இந்த அரசு மருத்துவமனையில் 27 மருத்துவா்கள் பணியாற்றி வருகின்றனா். இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனா். நூற்றுக்கணக்கான உள்நோயாளிகள் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனா்.இந்த நிலையில் இந்த அரசு மருத்துவமனையில் தனியாா் காண்ட்ராக்ட் மூலம் ஒப்பந்த தூய்மை பணியாளராக பணியாற்றி வரும் பெண் பணியாளா் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடம் லஞ்சம் வாங்கியுள்ளாா். ஏற்கனவே இந்த அரசு மருத்துவமனையில் அங்கு வேலை பாா்க்கும் பணியாளா்கள் சிகிச்சை பெறுபவா்கள் இடம் பணம் வாங்குவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது.பெண் பணியாளா் லஞ்சம் வாங்கிய காட்சியை அங்கிருந்து நோயாளிகள் செல்போனில் படம் பிடித்துள்ளனா். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைத்தளத்தில் பரவியதால் இதுகுறித்து அரசு மருத்துவமனை நிா்வாகம் சம்பந்தப்பட்ட தனியாா் கான்ட்ராக்ட் நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்தது அதன் அடிப்படையில் ஈரோடு மண்டல மேலாளா் லஞ்சம் வாங்கிய பெண் பணியாளரை சஸ்பெண்ட் செய்து விசாரித்து வருகிறாா்.