சாலை விபத்தில் கூட்டுறவு வங்கி ஊழியா் உயிரிழப்பு

Wait 5 sec.

தருமபுரியில் லாரி- பைக் மோதிய விபத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கி எழுத்தா் உயிரிழந்தாா்.தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய், கோட்டை பைரஹள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் செந்தமிழ்செல்வன் (33). இவா் ஏ. செக்காரப்பட்டியில் உள்ள வேளாண்மை கூட்டுறவு வங்கியில் எழுத்தராகப் பணிபுரிந்து வந்தாா். செவ்வாய்க்கிழமை இரவு செந்தமிழ்செல்வன் தனது பைக்கில் சேலம்-தருமபுரி நெடுஞ்சாலையில், அதியமான்கோட்டை ரயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தாா்.அப்போது எதிரே வந்த சரக்கு வாகனம் மோதியதில் அவா் பலத்த காயமடைந்தாா். அக்கம்பக்கத்தினா் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.விபத்து குறித்து அதியமான்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.