எக்ஸ் தளத்தின் கன்டட் உருவாக்குபவருக்கான வருவாய் பகிர்வு திட்டம் (கிரியேட்டர் ரெவின்யூ ஷேரிங்) முடிவுக்கு வருகிறது. அதற்கு மாற்றாக புதிய திட்டத்தை அறிமுகம் செய்திருக்கிறார் எலான் மஸ்க்.எக்ஸ் தளத்தில், கன்டட்களை உருவாக்கி பதிவிட்டு வருபவர்களுக்கான வருவாய் பகிர்வு திட்டம் 2026 செப்டம்பர் 7ஆம் தேதியுடன் காலாவதி ஆகிவிடும் என்று அறிவித்திருக்கும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம், ஆகஸ்ட் 7 முதலே அந்த திட்டத்துக்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்கப்படுவது நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், ஏற்கனவே இந்த திட்டத்தில் இணைந்து பணியாற்றி வருவோர் செப்.7 வரை வருவாய் ஈட்டுவார்கள், இவர்களுக்கு மூன்று தவணைகளாக வருவாய் வரவு வைக்கப்படும் என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.செப். 8 முதல், கிரியேட்டர் ரெவின்யூ ஷேரிங் திட்டத்தில் ஏற்கனவே இருக்கும் உறுப்பினர்கள் இனி, அசல் உள்ளடக்கத்திற்கான வெகுமதிகள் (ஒரிஜினல் கன்டெட் ரிவார்ட்ஸ்) திட்டத்தில் இணையும் வாய்ப்பை வழங்கவிருக்கிறது. ஆனால், புதிய திட்டத்தில் இணைய சில தகுதிகள் வரையறை செய்யப்பட்டுள்ளது.தற்போது, ஒரிஜினல் கன்டெட் ரிவார்ட்ஸ் திட்டத்தில் இணைபவர்களுக்கான தகுதிகளை கிரியேட்டர் ஸ்டுடியோ வாயிலாக அறிந்து கொள்ளலாம்.கிரியேட்டர் வருவாய் பகிர்வு திட்டத்தில் இணைய, கிரியேட்டர்கள் எக்ஸ் தளத்தில் உள்ள பிரீமியம், பிரீமியம் பிசினஸ் அல்லது பிரீமியம் ஆர்கனைசேஷன்ஸ் சந்தா மற்றும் கடந்த மூன்று மாதங்களில் குறைந்தது 5 லட்சம் ஆர்கானிக் இம்ப்ரெஷன்கள் மற்றும் குறைந்தது 500 சரிபார்க்கப்பட்ட ஃபாலோயர்களைக் கொண்டிருக்க வேண்டும். இந்த எக்ஸ் கணக்கு அங்கீகரிக்கப்பட்ட நாட்டில் பதிவு செய்யப்பட்டு, எக்ஸ் தளத்தில் விதிமுறைகளுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.இதன் மூலம், இத்தனை ஆண்டுகளாக கன்டெட் உருவாக்கி, வருவாய் ஈட்டிவந்தவர்கள், புதிய திட்டத்தில் இணைந்து பயன்பெறும் நிலை உருவாகியிருக்கிறது. Revenue-sharing program for content creators comes to an end! X announces.