ஜார்க்கண்டில் பல்வேறு பணி நியமனத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறப்படும் விவகாரத்தில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் சட்டப்பேரவையை நோக்கி பேரணியைத் தொங்கினர். இப்பிரச்னைக்காக ஒன்பது நாள்களாக உண்ணாவிரதம் இருந்துவரும் ஜேஎல்கேஎம் அமைப்பின் தலைவர் தேவேந்திர நாத் மஹ்தோ உடல் எடை 10.5 கிலோ குறைந்த நிலையிலும், ஆம்புலன்ஸ் வாகனத்தில் அமர்ந்தபடி இந்தப் பேரணியில் பங்கேற்றார். இந்த பேரணியின்போது முன்னாள் முதல்வர் சிபு சோரனின் உருவப்படத்தைக் கையில் ஏந்தியிருந்தனர். போராட்டத்தில் 17-வது நாளில் மூவர்ணக் கொடிகள் மற்றும் பதாகைகளை ஏந்தியவாறு தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். முதல்வர் ஹேமந்த் சோரனின் 51-வது பிறந்தநாளன்று நடைபெற்ற இந்தப் பேரணி, துர்வாவில் உள்ள பழைய சட்டப்பேரவை வளாகத்திற்கு வெளியே தொடங்கியது. போராட்டக்காரர்கள் புதிய சட்டப்பேரவை கட்டடத்தை சென்றடையத் திட்டமிட்டுள்ளனர். சட்டப்பேரவை வளாகத்தில் தடை உத்தரவுகள் பிறக்கப்பட்டதோடு, 4 கி.மீ. தூரம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நிலைமையை மூத்த அதிகாரிகள் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். விரை அதிரடிப் படை, இந்திய ரிசர்வ் பட்டாலியன், மாவட்டக் காவல் துறை மற்றும் விரைவு எதிர்வினைக் குழு ஆகியவற்றைச் சேர்ந்த 1,500-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.நகரில் உள்ள பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. போராட்டக்காரர்களுடன் அரசு பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்திய போதிலும், இதுவரை சுமுக தீர்வு எட்டப்படவில்லை. கடைசிக் கட்டப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு, போராட்டக்காரர்களின் கோரிக்கைகளில் 98 சதவீதத்தை ஏற்றுக்கொண்டதாக அரசு தெரிவித்தது. இருப்பினும், ரத்து செய்யப்பட வேண்டும் என்று தாங்கள் கோரிய 13 தேர்வுகளில் மூன்றை மட்டுமே ரத்து செய்ய அரசு ஒப்புக்கொண்டதாகப் போராட்டக்காரர்கள் கூறினர்.சிபிஐ விசாரணைக்கான எங்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை நாங்கள் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்று ஜேபிஎஸ்சி-ஜேஎஸ்எஸ்சி (ஜெபிஎஸ்சி - ஜெஎஸ்எஸ்சி) சீர்திருத்த மன்றத்தின் தலைவர் ரவீந்திர பாஸ்வான் கூறினார்.ஜார்க்கண்ட் பொதுப் பணி ஆணையம் மற்றும் ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றில் விரிவான சீர்திருத்தங்களைச் செய்யுமாறு போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், 14-வது ஜார்க்கண்ட் பிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு உள்ளிட்ட பல பணி நியமனத் தேர்வுகளை ரத்து செய்யவும், முறைகேடுகள் குறித்த புகார்கள் மீது சிபிஐ அல்லது மாநிலத்திற்கு வெளியேயுள்ள ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவைக் கொண்டு சுதந்திரமான விசாரணை நடத்தவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். Thousands of job aspirants, protesting alleged irregularities in various recruitment examinations in Jharkhand, began their march to the state assembly on Monday morning.இலுப்பூர் அருகே ஊராட்சிமன்ற தலைவர் வெட்டிக் கொலை!