அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்ற முடக்கம் தொடரும்: பிரியங்கா காந்தி!

Wait 5 sec.

தில்லியில் மாணவர்கள் மீதான காவல்துறையின் அத்துமீறல்கள் விவகாரம் தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்கும் வரை நாடாளுமன்றத்தில் முடக்கம் தொடரும் எனக் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி வத்ரா வலியுறுத்தினார். நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.மழைக்காலக் கூட்டத்தொடர் முடிவடைய இன்னும் நான்கு நாட்களே உள்ள நிலையில், நாடாளுமன்றத்தில் நிலவும் முட்டுக்கட்டையால் பெண்கள் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மற்றும் வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) சட்டம் தொடர்பான முக்கிய மசோதாக்களின் நிலை நிச்சயமற்றதாக உள்ளது.திங்கள்கிழமைக்கான மக்களவை அலுவல் பட்டியலில் இந்த மசோதாக்கள் எதுவும் இடம்பெறவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அறிக்கை அளிக்கும் வரை நாடாளுமன்றத்தில் முட்டுக்கட்டை தொடரும் என்று நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பிரியங்கா காந்தி கூறினார்.