விழுப்புரத்தில் தொழில்சங்கங்களின் கூட்டமைப்பினர் மறியல்

Wait 5 sec.

விழுப்புரத்தில் தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் திங்கள்கிழமை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். நான்குத் தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், தொழிலாளர் பாதுகாப்புச் சட்டங்களை மீண்டும் அமல்படுத்த வேண்டும், தொழிற்சங்க உரிமைகளுக்கு முழுமையான உத்தரவாதம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு தொழிற்சங்கங்கள் இணைந்து நடத்திய மறியல் போராட்டம் விழுப்புரம் தலைமை அஞ்சல் அலுவலகம் அருகில் திங்கள்கிழமை காலை நடைபெற்றது.இந்த போராட்டத்திற்கு சிஐடியு மாநில துணைத்தலைவர் கருப்பையா தலைமை வகித்தார். தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டச் செயலர் சேகர், சிஐடியு மாவட்டச் செயலர் மூர்த்தி, மாநிலக் குழு உறுப்பினர் மலர்விழி , விவசாய தொழிலாளர் சங்கம் மாவட்ட செயலாளர் முருகன், சிஐடி மாவட்ட துணைத் தலைவர் முத்துக்குமரன் உள்ளிட்ட பலர் பங்கேற்று மத்திய அரசைக் கண்டித்து முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீஸார் கைது செய்து திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.Members of the Trade Union Federation staged a road blockade protest in Viluppuram on Monday.மேட்டூர் அணை நீர்மட்டம்: இன்றைய நிலவரம்!