நாடாளுமன்றம் 4-வது வாரமாக முடங்கியது!

Wait 5 sec.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்களின் அமளியால் தொடர்ந்து நான்காவது வாரமாக இரு அவைகளும் முடங்கியுள்ளன.நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தியது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா விளக்கம் அளிக்க வேண்டும் எனத் தெரிவித்து எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் நான்காவது வாரத்தின் முதல் நாளான இன்று காலை வளாகத்துக்கு வந்த பிரியங்கா காந்தி செய்தியாளர்களுடன் பேசுகையில், உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் விளக்கம் கிடைக்கும் வரை நாடாளுமன்றத்தை முடக்குவோம் என்றார்.இந்த நிலையில், மக்களவை கூட்டத்தொடர் இன்று காலை கூடியவுடன் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்ட நிலையில், பகல் 12 மணிவரை அவை நடவடிக்கைகளை ஒத்திவைப்பதாக அறிவிக்கப்பட்டது.இதேபோல், மாநிலங்களவையிலும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு முழக்கமிட்டதால் சிறிது நேரத்தில் ஒத்திவைக்கப்பட்டது. வருகின்ற ஆகஸ்ட் 13 ஆம் தேதியுடன் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.Parliament stalled for the fourth consecutive week!முதல்வர் விஜய்யை சிரிக்க வைத்த பேச்சு! திமுக முன்னாள் அமைச்சரால் கலகலத்த பேரவை!