அடுத்தடுத்து அதிர்ந்த லடாக்! 4 மணி நேரத்தில் 2 நிலநடுக்கங்கள்!

Wait 5 sec.

யூனியன் பிரதேசமான லடாக்கில் சுமார் நான்கு மணி நேரத்தில் அடுத்தடுத்த இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டது அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது. தேசிய நில அதிர்வு மையத்தின் தகவலின்படி, முதல் நிலநடுக்கம் இன்று காலை 6.05-க்கு ஏற்பட்டது. இதன் மையப்புள்ளி அட்சரேகை 36.88 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 74.402 டிகிரியில் அமைந்திருந்தது. இது லடாக்கின் லே பகுதியில் 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்ததாக 4.3 ரிக்டர் அளவு கொண்ட மற்றொரு நிலநடுக்கம் காலை 9.54 மணிக்கு, வட அட்சரேகை 36.76 டிகிரி மற்றும் கிழக்கு தீர்க்கரேகை 75.326 டிகிரி என்ற இடத்தில், லே பகுதியில் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாகத் தேசிய நில அதிர்வு மையம் கூறியது.இரண்டு நிலநடுக்கங்களும் சுமார் நான்கு மணி நேர இடைவெளியில் லே பிராந்தியத்தில் பதிவாகின. நிலநடுக்கத்தால் உயிரிழப்பு, சொத்து சேதம் குறித்த உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.நில அதிர்வு அபாயம் அதிகம் உள்ள மண்டலத்தில் அமைந்துள்ள இப்பகுதியில், அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்கள் மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தின.Two earthquakes of moderate magnitude jolted the Union Territory of Ladakh within a span of nearly four hours on Thursday, triggering fear among residents.மழைக்கால கூட்டத்தொடர்: மக்களவை நண்பகல் 2 மணி வரை ஒத்திவைப்புசென்னையில் தவெக அரசின் முதல் முதலீட்டாளர்கள் மாநாடு தொடங்கியது!