மக்களவை தலைவர் ஓம் பிர்லாவின் தேநீர் விருந்தை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்துள்ள நிலையில், திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி பங்கேற்றுள்ளார்.நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் ஜூலை 20 ஆம் தேதி தொடங்கிய நிலையில், இரு அவைகளிலும் இன்றுடன் நிறைவடைந்தது.தில்லியில் மாணவர்கள் போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்கு அனுமதி அளித்தது யார்? எனவும், ராமர் கோயில் நன்கொடை திருட்டு விவகாரம் குறித்தும் கேள்வியெழுப்பி இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டு வந்தனர்.இந்த நிலையில், மக்களவை கூட்டத்தொடர் நிறைவடைந்ததை தொடர்ந்து, அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் வழக்கம்போல் அவைத் தலைவர் ஓம் பிர்லா தேநீர் விருந்து அளித்துள்ளார்.இந்த தேநீர் விருந்துக்கு அனைத்துக் கட்சி எம்.பி.க்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், சமாஜவாதி உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் புறக்கணித்துள்ளனர்.ஆனால், இந்தியா கூட்டணியிலிருந்து விலகியுள்ள திமுகவின் நாடாளுமன்றக் குழுத் தலைவர் கனிமொழி கலந்துகொண்டுள்ளார்.இந்த விருந்தில், பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள், தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சிகளின் எம்.பி.க்கள் பங்கேற்றுள்ளனர்.பாஜகவுடன் திமுக நெருக்கம் காட்டி வருவதாகவும், தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மசோதாக்களை திமுக உதவியுடன் பாஜக நிறைவேற்ற திட்டமிட்டுள்ளதாகவும் தவெக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் விமர்சித்து வரும் நிலையில், தேநீர் விருந்தில் கனிமொழி கலந்துகொண்டிருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.Kanimozhi joins Modi at the Lok Sabha Speaker's tea party; INDIA bloc boycotts the event!நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் நிறைவு! இரு அவைகளிலும் 11 மசோதாக்கள் நிறைவேற்றம்!