இயக்குநர் மணிரத்னம் இயக்கிய இதயத்தை திருடாதே திரைப்படம் மறுவெளியீடாகிறது. இயக்குநர் மணிரத்னம் இயக்கிய திரைப்படங்களில் சிறப்பான கவனத்தைப் பெற்ற திரைப்படம் இதயத்தை திருடாதே. நடிகர்கள் நாகர்ஜுனா, அமலா நடிப்பில் 1989 ஆம் ஆண்டு வெளியான இந்தத் திரைப்படம் முழுமையான காதல் திரைப்படமாக எடுக்கப்பட்டது. இசையமைப்பாளர் இளையராஜா இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்பைப் பெற்றன. முக்கியமாக, ஓ பிரியா பிரியா, ஓ பாப்பா லாலி பாடல்கள் இன்று வரை கேட்கப்படும் பாடல்களில் ஒன்றாகவும் இருக்கின்றன. பிசி ஸ்ரீராம் ஒளிப்பதிவில் படமாக்கப்பட்ட காதல் காட்சிகள் ரசிகர்களை ஈர்த்திருந்தன. இந்த நிலையில், 37 ஆண்டுகள் கழித்து இப்படம் தொழில்நுட்ப மெருகேற்றம் செய்யப்பட்டு ஆக. 28 ஆம் தேதி மறுவெளியீடாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் ரஜினியின் தர்மன் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு!The film Idhayathai Thirudathey, directed by Mani Ratnam, is being re-released.