சுதந்திர தின விழாவை முன்னிட்டு இன்று சென்னை, புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் மூன்றாவது ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை புனித ஜார்ஜ் கோட்டை முகப்பில் 80-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு, இன்று மூன்றாவது முழு அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி மிகக் கம்பீரமாக நடைபெற்றது. காவல்துறை மற்றும் பாதுகாப்புப் படையினர் இதில் பங்கேற்றனர்.காவல் துறையினர், கவசப் படை மற்றும் காலாட்படை வீரர்கள் ஆகியோர் பங்கேற்றனர். கோட்டை மற்றும் மெரினா சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ஒத்திகை நாள்களில் காலை நேரத்தில் சிறப்புப் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஆகஸ்ட் 14 மற்றும் 15 ஆகிய தேதிகளில் கோட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் 'சிவப்பு மண்டலமாக' அறிவிக்கப்பட்டு, ட்ரோன்கள் பறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.கார்கே அவமதிப்பு நம் அனைவரின் மீதான அவமதிப்பே! சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்! சி.பி. ராதாகிருஷ்ணன்