சட்டப்பேரவையிலும் தண்ணீர் பிரச்னை ஓயவில்லை என்று பிரேமலதா விஜயகாந்த் கூறினார். பேரவையில் பேசிய பிரேமலதா விஜயகாந்த், "தண்ணீர் பிரச்னை அங்கும் ஓயவில்லை, இங்கும் ஓயவில்லை. ஒரு பாட்டிலில் தண்ணீர் கொடுங்கள் என்று கேட்டேன். அண்ணன் ஓபிஎஸ் அதற்கும் ஒரு தடை போட்டுவிட்டார். அவர் சும்மாதான் பேசினார் என்று சொன்னார். பாதி பேருக்கு மட்டும் பாட்டிலில் தண்ணீர் கொடுக்கிறார்கள். சிலருக்கு டம்ளரில்தான் கொடுக்கிறார்கள். அனைவருக்கும் பாட்டிலில் கொடுத்தால் சுகாதாரமாக இருக்கும் . சட்டப்பேரவையில் நோட்டுகளில் கையெழுத்திடுவதற்கு பதிலாக வருகைப்பதிவுக்கு பயோமெட்ரிக் முறை கொண்டுவர வேண்டும். அதேபோல சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரலை செய்யும் புகைப்படக்கலைஞர்களுக்கு இடைவெளி இல்லாமல் நிற்கிறார்கள். அவர்களுக்கு சிறிது நேரம் ஓய்வு கொடுக்கும்படி மாற்றிக்கொடுக்க வேண்டும்" என்றார். புதிய தவெக அரசின் முதல் பேரவைக் கூட்டம் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றபோதே, எம்எல்ஏக்களுக்கு பாட்டிலில் தண்ணீர் கொடுக்க வேண்டும் என்று முதல்வரிடம் நேரடியாக பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை வைத்தது குறிப்பிடத்தக்கது. The water crisis has not yet subsided, even in the Assembly: Premalatha vijayakanthமுதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சு